book

பாரதியார் கவிதைகள்

Bharathiyar Kavithaigal

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் பத்மதேவன்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :544
பதிப்பு :4
Published on :2017
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, பாரதியார் கவிதைகள்
Add to Cart

மோகன வெளிகளில், கற்பனைச் சிறகுகளைக் கட்டிக் கொண்டு கனவுப் போதையில் உலாவந்து கொண்டிருந்த இலக்கிய தேவதையை, இந்தப் பூமியில் கால்பதித்து நடக்க வைத்தவன் பாரதிதான்  ஆகாய கங்கையாயிருந்த கவிதையை உணர்வுத் தவமிருந்து இந்த மண்ணுக்கு இழுத்து வந்த பகீரத முயற்சிதான் பாரிதியன் முயற்சி.

உப்பரிகைத் தோட்டங்களின் பாசனத்திற்கு மட்டுமே பயன்பட்டு வந்த கவிதை ஓடையை மக்களின் மனவயல்களுக்கு  மடைமாற்றம் செய்தவன் அவன்தான்.

பாரதியின் கவிதைகளில் அக்கினி திராவகத்தின் அலை அடிப்படையும் காணலாம்.  குற்றால அருவியின் சாரல் தெறிப்பதையும் தரிசிக்கலாம்.

ஊழிக்கூத்தின் உடுக்கைச் சத்தத்தையும் அவன் பாடல்களில் கேட்கலாம்;  மரகத வீணையின் நளின ராகங்களையும் செவிமடுக்கலாம்.