book

ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை

Otrai Pagadaiyil Enjum Nambikkai

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கீதா சுகுமாரன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :78
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789382033813
Add to Cart

கீதா சுகுமாரனின் கவிதைகளிலுள்ள சில பிம்பங்களை, தெறிக்கும் சில சொற்களை. புதைந்த மௌனத்தை மட்டும் பிடித்துக்கொண்டு கவிதைகள் முழுவதிலும் முங்கி நிந்தி வரமுடியும். நந்தும்போது பாதி கிழிந்த சிவப்புச் சிலையுடன் ஒற்றைப் பகடையில் வாசலாடும் நம்பிக்கையுடன் நிற்கும் தமயந்தியை அல்லது பேயுருக்கொண்ட காரைக்கால் அம்மையாரைக் கடந்து போகலாம். சீதையிடம் உரையாடும் நல்லதங்காளை எதிர்கொள்ளலாம் அல்லது "நான் யார்? என்ற கேள்வியை எழுப்பும் கும்பகர்ணனின் மனைவியை, ஆணுக்கும் பசலை நோய் வரவேண்டும் என்று நினைக்கும் ஆதிமந்தியை, வனவாசம் முடிந்து வந்ததும் விட்ட தூக்கத்தைப் பிடிக்க ஒடும் லக்ஷமணனின் மனைவி ஊர்மிளையை எல்லோரையும் அறிமுகம் செய்துகொள்ளலாம். முற்றும் எதிர் பாராத தருணத்தில், அஸ்பாரகஸ் கூட்டு செய்யும், பனியைத் தழுவி தேகம் எளியும், எஸ்ரா பவுண்டையும் ஸில்வியா பிளாத்தையும் படிக்கும், காதல் கத்தியாய் தன் உடலில் இறங்குவதைச் சொல்லும், கனவிலி, முகமிலி, பெயரிலிப் பெண்களின் அக வெளிகளுக்குள் நுழையலாம். அக்கரையை எட்டிய பின் மீண்டும் இக்கரை வரை நீந்த வேண்டிவரும் ஒரு சொல்லையோ, ஒரு பிம்பத்தையோ தேடியபடி. நீச்சல் தெரியாதவர்களை இழுத்துக்கொள்ளும் சுழிகளும் உண்டு.