book

பெண் கதைகள்

Pen Kathaigal

₹157.5₹175 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. நாஜநாராயணன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :200
பதிப்பு :3
Published on :2009
Add to Cart

1988ல் ஆனந்தவிகடன் வார இதழில் கோபல்லபுரத்து மக்கள் தொடரினுள் இரண்டாம்பாகம் 6வது அத்தியாயத்தில், ஊரிலுள்ள ஆண்களிடத்தில் இந்த செவ்வாய்கிழமை விரதம் பற்றி என்ன கருத்துக்கள் இருந்ததோ அதுதான் எனது கருத்தாகவும் இருந்தது! நாட்டார் கதைகளில் சரித்திரத்தைத் தேடக்கூடாது. அதே சமயத்தில் ஒரு ஓரையாக சரித்திரம், வைரத்தினுள் நீரோட்டமாகத் தெரியவும் செய்யும். இப்போது "தங்கத்தைத் தேடி" என்று ஒரு மனுசக் கூட்டம் அலைவதுபோல் பூர்வீக காலத்தில் ''நெருப்பைத் தேடி" அலைந்ததாக ஒரு தென் அமெரிக்கப் பழங்கதை சொல்லுகிறது. அது, மக்கள் பச்சை மாமிசத்தைத் தின்றுவாழ்ந்த காட்டு மிராண்டிக் காலம். ஆண்களெல்லாம் வேட்டைக்குப் போனபிறகு இவர்கள் மட்டும் கமுக்கமாகத் தங்கள் “அறை”யிலிருந்து நெருப்பை எடுத்து மாமிசத்தை வாட்டித் தின்பார்களாம். ஒருநாள் திடீரென்று எதிர்பாராமல், வேட்டைக்குப் போயிருந்த ஆண்கள் திரும்பி வந்துவிட்டார்களாம். பெண்கள் அவசர அவசரமாக, நெருப்பில் வாட்டிப் பக்குவப்படுத்திய மாமிசத் துண்டங்கள் அவ்வளவையும் எடுத்துத் தங்கள் "அறை”களினுள் ஒளித்து வைத்தபோது சில மாமிசத் துண்டுகள் தவறிவிட்டன. வந்த ஆண் பிள்ளைகள் அவைகளை எடுத்துத் தின்றபோது ரொம்ப ருசியாக இருந்ததாம். எப்படி இந்தமாதிரிப் பக்குவப்படுத்தினீர்கள், நெருப்பு எங்கிருந்து கிடைத்தது என்று கேட்டபோது தெரியாது என்று சொல்லிவிட்டார்களாம். இதை எப்படியாவது கண்டுபிடிக்கணும் என்று ஆண்பிள்ளைகள் தீர்மானித்தார்களாம். (இப்படித்தான் முதன் முதலில் பெண்கள் பேரில் ஆம்பிளைகளுக்கு சந்தேகம் ஆரம்பித்தது என்று ஒரு ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் கதை ஒன்று சொல்லுகிறது!) எப்படியோ, ஆண் பெண் பகைமை தொடங்கி பெண்ணை ஒடுக்கி, பெண் தலைமையை ஆண்கள் பறித்துக்கொண்டார்கள். பெண் இனத்தையே பட்டினிபோட்டு ஒடுக்கினார்கள். இந்தப் பொல்லாத பகைமை நீங்காமல்ப் போனால் மனு அழிந்தும் போகுஎன்ற நிலைமை ஏற்பட்டபோதுதான் நாட்டுப்புறக் கதைகளில் ஒரு அவ்வையார் வருகிறார். ஆண்களை வெல்ல பல தந்திர உபாயங்களைச் சொல்லித்தருகிறார். பெண் இனத்தைக் காப்பாற்றினாள். அவ்வையார் நோம்பு என்கிற செவ்வாய்க்கிழமை விரதம் தோன்றிய விதம் - கதை - இப்படித்தான். இந்த விவரங்களெல்லாம் எனக்குத் தெரியாத காலத்தில் எழுதியவைதான் இந்தத் தொகுதியில் உள்ள "பெண்" கதைகள். என்றாலும் இக்கதைகள் இப்பவும் படிக்க சுவாரச்சியமாக இருக்கின்றன. ஒரு காலத்தில் நிலவிய பகைமை இருந்துவிட்டுப் போகட்டும். என்ன பகைமை இருந்தாலும் அவள் இன்றி நம்மால் இருக்க முடியுமா? ஆட்டுக் கறியின்போது அடித்துக் கொள்கிறதும் கோழிக் கறியின் போது கூடிக் கொள்கிறதும் சகஜம்தானெ. வரகரிசி வேகும் நேரம்தான் புருசம் பொண்டாட்டிச் சண்டை என்கிறது ஒரு சொலவம். "பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா"என்கிறான் நம்மவன்! சரீரத்தில் சரிபாதி எப்பவோ கொடுத்துவிட்டோமே நாம்.