குறள் கண்ட வாழ்வு
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா அ.ச. ஞானசம்பந்தன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :140
பதிப்பு :1
Published on :2020
Add to Cartகம்பன் காப்பியத்திலிருந்து திறனாய்வு நோக்கோடு, நாடும் மண்ணும், அரசியர்
மூவர், தம்பியர் இருவர் ஆகிய மூன்று நூல்களை எழுதினேன். ஆனால் என் தமிழ்
நடை கடினமானதாக இருந்ததை உணர்ந்தேன். அந்த நடையில் மாற்றம் வரும் நாள்
வந்தது. ஒருநாள், ராயப்பேட்டை பசார் ரோட்டில் உள்ள சிறுமாடியில்
குடியிருந்தேன். எதிர்பாராமல் என் வீட்டுக்கு வந்தார், ஆனந்தவிகடன்
ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன். திருக்குறளை அடிப்படையாக வைத்து, இருபது முப்பது
கட்டுரைகள் எழுதித் தரவேண்டும் என்றார். அக்காலகட்டத்தில் ஆனந்த விகடனில்
வரும் கதை கட்டுரைகள் பெரும்பாலும் பிராமண சமூகத்தினரின் பேச்சு நடையாகவே
இருக்கும். அந்த நடையில் என்னால் எழுத இயலாது என்று பணிவுடன் சொன்னேன்.
அவரோ, சொற்பொழிவுக்குப் போகின்ற நான் கூட்டத்தாரின் திறத்துக்கு ஏற்ப எளிய
நடையில் பேசுவதை எடுத்துக்காட்டி, எழுத்து நடையும் அதுபோல் இருக்கட்டும்
என்று பிடிவாதமாகச் சொல்ல, எழுத ஒப்புக் கொண்டேன். புறப்படும் முன்
வாயிற்படியில் நின்று கொண்டு அவர் சொன்னது, என் எழுத்து நடையை முற்றிலும்
மாற்றியமைத்து விட்டது. அவர் சொன்னார்...