book

குறுகிய வழி (நோபல் பரிசு பெற்ற ஆசிரியர் - ஆந்த்ரே ழீடு)

₹155+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. நா. சுப்ரமண்யம்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

இந்நாவல் வெறும் 150 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ள 1947 ல் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கதை ஜெரோம், அலிஸ்ஸா என இருவரிடையேயான நிறைவேறாத காதலை பூரணமான நேசத்தை, காதலுணர்வு பொங்கப்பேசுகிறது. ஜெரோம் தானே கதையைக்கூறுகிறான். சில இடங்கள் மிகக் கடுமையான உளவெழுச்சியை வாசிப்பவனிடம் ஏற்படுத்தி நிலைகுலையச் செய்கின்றன என்பதை ஆசிரியனின் வலிமை என்றே கொள்ளலாம். நேர்த்தியான க.நா.சு மொழிபெயர்ப்பு கதைக்கு மிக நெருக்கமாக உணரச்செய்கிறது. அலிஸ்ஸாவின் மனம், மதம், கடவுள் என்று கடும் கட்டுப்பாடுகள் குவிந்தது. அவளின் இன்னொரு பகுதி அன்பை, நேசத்தை நோக்கி செலுத்தினாலும், மதம், கடவுள் என அவளின் உடலில் அறையப்பட்டுள்ள ஆணிகள் அவளை கடும் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கி, அதுவே நோயாக மாற காதலை உணர்ந்தும் வெளியிட முடியாது தன்னோடு போரிட்டே வெல்ல முடியாது இறந்துபோகிறாள். வாழ்வை நிறுவனமயமாக்கம் செய்யும் போது ஏற்படும் சேதாரங்கள் மனிதர்களுக்கிடையேயான அன்பை, நேசத்தை, இணக்கத்தை இழக்க நேருவதுதான் மாபெரும் அவலமாக இன்றைய காலத்தில் நாம் சந்திக்கவேண்டியதாக உள்ளது. மிகச்சிறந்த உயிர்ப்புடன் உண்மையைப் பேசுகின்ற நாவல் இது. க.நா.சுவின் மொழிபெயர்ப்பில் மிக எளியதாக மூலத்தின் உணர்வை வாசகனுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறது.