book

உரைநடையில் கம்பராமாயணம் முழுவதும்

Urainadaiyil Kambaramayanam

₹380+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் மு. செல்வநாதன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :486
பதிப்பு :8
Published on :2012
Out of Stock
Add to Alert List

அமரகவி பாரதியாரால் பாராட்டப் பெற்ற கம்பனின் காவியமான கம்பராமாயணம் இன்றைய உரைநடை உலகத்தில் புதிய உருவெடுத்து ‘உரை நடை’ நூலாக வெளி வந்துள்ளது.
சிலபேர் உரை நடையைக் கவிதையாக்கிக் கொண்டிருக்கிற இக்கால கட்டத்தில் உரைநடை ஆசிரியர் கவித்துவமான வரிகளை உரைநடையின் பெயரில் காவியச் சுவை குன்றாமல் செறிவான வரிகளுடன், நளினமான வார்த்தைக் கோப்புகளுடன் வளமையான தமிழில் வழங்கியுள்ளார் இலக்கிய சோதனைக்காரர் ‘பேராசிரியர் ராசீ’.
இன்றியமையாத தருணங்களில் மட்டுமே ‘கவிதை வரிகள்’ கண் சிமிட்டுகின்றன. மற்றபடி நூலெங்கும் உரைநடை ராஜ நடை போடுகிறது. தொய்வில்லாத ஆற்றொழுக்கான உரைநடை.
காட்சிகள் கண் முன்னே உயிர்பெற்று உலவும் அதிசயத்தை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்; இதனை மிகச் சிறந்த உலக அளவிலான நாடக நூல் என்று அறுதியிட்டுக் கூறலாம். பாராட்டு கம்பனுக்கு மட்டுமல்ல; போராசியர் ராசீக்கும் தான்.