book

முதுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முத்திரைகள்

Muthumaikku Muttrupulli Vaikkum

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ஜான் பி. நாயகம்
பதிப்பகம் :சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :136
பதிப்பு :9
Published on :2016
Out of Stock
Add to Alert List

'அகம் பிரம்மாஸ்மி' - நமக்குள்தான் இறைவன் இருக்கிறான் என்ற பொருளை மட்டுமல்ல; நமக்கு ஏற்படும் உடல், மனம் சார்ந்த அனைத்து நல்லது, கெட்டதுகளைச் சீர்செய்து சமனாக்கும் சக்தியும் நமக்குள்ளேயே இருக்கிறது என்பதையும் சேர்த்துத்தான் சொல்கிறது! நமக்குள் இருக்கிற பிணிகளை, உடலுறுப்பு இயக்கக் குறைகளை மருந்து போன்ற புறப்பொருட்கள் இல்லாமல் நமது நரம்பு மண்டலங்களைத் தூண்டியே சீர்செய்ய முடியும் அதில் யோகம், தியானம், பிரணாயாமம் கலந்த முத்திரைப் பயிற்சி எளிமையானது இதை நமது முன்னோர்கள் ரகசியமானதாக வைத்திருக்கிறார்கள் சில காரணங்களால் பின்னால் வந்தவர்கள் அதை தங்கள் உடமைப் பொருள்போல் கருதி, அந்தக் கலைகளைத் தங்கள் வாழ்க்கை வசதிக்குப் பொருள் தரும் கலைகளாக மாற்றி விட்டார்கள்!
அரிய கலைகளெல்லாம் அனைவருக்கும் உரியது. அதிலும் மனிதர்களை உயர்வுபடுத்தும்- உறுதிபடுத்தும் யோகம் சார்ந்த கலைகள் மக்களின் சமூகச் சொத்து என்று சொல்கிறார் ஜாண் பி. நாயகம்! 'எனக்கு நரகமே கிடைப்பதாயினும் 'ஓம் நமோ நாராயணா" என்ற மந்திரத்தின் உட்பொருளை உலக மாந்தர் அத்தனை பேருக்கும் சொல்லியே தீருவேன்' என்று கோபுரம் ஏறி பிரகடனம் செய்த ராமானுஜர்போல், முத்திரை என்ற உயரிய யோகத்தின் அளப்பரிய பலன்களை எளியமுறையில் சொல்லி இருக்கிறார் இந்நூலாசிரியர் ஜாண் பி. நாயகம்!
முத்திரைகள் நம் இளமை காக்கும் எளிய பயிற்சி பயிலப் பயில பரவும் புத்துணர்வு: விலகும் வயோதிகம்!