book

செட்டி நாட்டு இட்லி வகைகள்

₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெரியகுளம் ஜெயா
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

செய்முறை:
காலையில் இட்லி தயாரிப்பதற்கு முதல் நாளே மாவை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.இட்லிக்குத் தேவையான அரிசி, உளுந்து ஆகியவற்றை தனித்தனியே ஊறவைக்கவும். இரண்டு மணி நேரம் ஊறியபிறகு உளுந்தை முதலில் அரைக்கவும்.அடிக்கடி தண்ணீர் தெளித்து சுமார் 20 நிமிடங்கள் அரைக்கவும். மாவு நன்றாக பொங்கி வரவேண்டும்.அரிசியை நன்றாக கல்நீக்கி சுத்தம் செய்தபின்னர் அதே உரலில் போட்டு அரைத்து எடுக்கவும். பின்னர் இரண்டு மாவையும் சேர்த்துக் கலக்கவும். மாவில் தேவையான உப்பு சேர்த்து கரைக்கவும். பீட்ரூட்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சாறு எடுத்துக் கொள்ளவும்.அதனை இட்லி மாவுடன் தேவையான அளவிற்கு கலந்து இட்லித் தட்டில் ஊற்றி வேகவைக்கவும்.சிகப்புக் கலரில் இனிப்புச்சுவையுடன் இருக்கும் இந்த இட்லியை குழந்தைகள் விரும்பிச்சாப்பிடுவார்கள்.அவர்கள் விரும்பும் வண்ணம் செய்து கொடுத்தால் இன்னும் வேண்டும் என்று கேட்டுச்சாப்பிடுவார்கள். பீட்ரூட்டிற்குப் பதிலாக கேரட், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றையும் சேர்த்துச் செய்யலாம்.