book

கடவுள் உருவங்களை வரையக் கற்றுக்கொள்ளுங்கள்

Kadavul Uruvangalai Varaiya Kattrukkollungal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :80
பதிப்பு :3
Published on :2015
Out of Stock
Add to Alert List

நாம் ஒவ்வொருவரும் இயல்பிலேயே கலைஞர்கள் தாம். கலைஞர்களுக்கு இருக்க வேண்டிய கலையார்வம் என்பது நம்முள்ளேயும் ததும்பி நிற்கிறது. ஆனால், அதை வெளிப்படுத்தும் முறை களைத் தெரியாததாலேயே, மிகச் சிறந்த கலைப் படைப்புகளைப் பிறர் எவரேனும் படைத்திருந்தால் அவற்றைப் பார்த்துப் பிரமித்து நிற்கிறோம். அந்தப் படைப்பாளர்களைப் பெரிதும் பாராட்டி மகிழ்வதுடன், நம்மால் அப்படிப் படைக்க முடியவில்லையே என்று எண்ணி ஏங்குகிறோம். ஆனால், உண்மையாக முயன்றால் நம்மாலும் கலைப்படைப்புகளை உருவாக்க முடியும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற கருத்து ஓவியக் கலைக்கும் முற்றிலும் பொருந்தக் கூடியதே.
அந்த வகையில் ஓவியக் கலையில் விருப்பம் மட்டும் இருந்து, அதைச் செயல்படுத்த முடியாத நிலையில் இருப்பவர்களுக்கும், ஓரளவு ஆர்வமும் பயிற்சியும் பெற்றுள்ளவர்கள் அந்த ஆற்றலை முழு அளவில் வளர்த்துக் கொள்வதற்கும் நல்லதொரு வழிகாட்டியாக இந்நூல் அமைகிறது என்பது எங்கள் எண்ணம். இந்நூலில் எண்ணற்ற படங்கள் உள்ளன. ஒரு படத்தை வரையத் தொடங்குவது எப்படி, அந்தப்படத்தை முழுமை பெறச்செய்து முடிப்பது எப்படி, என்பனவற்றையெல்லாம் படிப்படியான படங்கள் மூலமாகவே விளக்கிக் காட்டப்பட்டுள்ளன.