book

கணித வரலாறு

Kanitha Varalaaru

₹540
எழுத்தாளர் :பி. முத்துக்குமரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :416
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788123431659
Add to Cart

இந்தியக்கணித வரலாறு
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" - திருவள்ளுவர் என்று கூறி கணிதத்தின் முக்கியத்துவத்தை திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பே நிலைநிறுத்தியுள்ளார். திருக்குறளில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, "அறு", "எழு", "எண்", பத்து, "கோடி" ஆகிய எண்கள் அல்லது தொகையீடுகள் அங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் "தொண்டு" அல்லது "தொன்பது" பயன்படுத்தப்படவில்லை.

தமிழ் எண்ணுருக்கள், தமிழில் பூச்சியத்துக்கு குறியீடு இல்லை. எண்களை எழுதுவதில் இடமதிப்புத் திட்டத்தையும் பூச்சியம் என்ற கருத்தையும் உருவாக்கி வருங்காலக்கணிதக்குறியீட்டுமுறைக்கு அடிகோலிட்டது பழையகால இந்தியா. இதைத்தவிர இந்தியக் கணிதவியலர்கள் (ஆரியபட்டர், பிரம்மகுப்தர், பாஸ்கராச்சாரியர், இன்னும் பலர்) மேற்கத்தியநாடுகள் மறுமலர்ச்சியடைந்து அறிவியலில் வளர்வதற்கு முன்னமேயே பலதுறைகளில் முன்னேற்றம் கண்டிருந்தனர். வேதகாலத்துக்கணிதத்தின் கணிப்பு முறைகள் சுல்வசூத்திரங்களின் வடிவியல்
சூனியமும் இடமதிப்புத் திட்டமும்
எண்களின் அடிப்படைகளைப்பற்றி ஜைனர்கள் பாக்சாலி கையெழுத்துப்பிரதிகளின் சமன்பாடுகள் வானவியல் கேரளத்தில் நுண்கணிதத்தின் முதல் கண்டுபிடிப்புகள் இவையெல்லாம் இந்தியக்கணிதத்தின் சிறப்புகள்.