book

அறிவூட்டும் சிறுவர் பாடல்கள்

Arivootum Siruvar Paadalgal

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசி. கண்ணம்பிரத்தினம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொது
பக்கங்கள் :56
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788188049677
Add to Cart

குழந்தைகளிடமிருந்து என்ன, ஏன், எதற்காக என்ற கேள்விகள் எழுந்துகொண்டேயிருக்கும். அசைவதெல்லாம் குழந்தைகளுக்கு ஆச்சரியமாகவே இருக்கும். ஓடுகின்ளறவை, ஆடுகின்றவையெல்லாம் உற்சாகமாகவே இருக்கும். குழந்தைகள் எந்த இடத்திலும் சோர்ந்து இருப்பதில்லை. எதையாவது செய்துகொண்டேயிருப்பார்கள். அதனால்தான் குழந்தைகளை 'விஞ்ஞானி' என்றார் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான பார்ரத்னா, டாக்டர் ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் அவர்கள். மாணவச் சிறுவர்களைத் தம்பக்கம் சேர்த்துக்கொண்டு அவர்களைக் கேள்விகள் கேட்கவைத்து அறிவார்ந்த பதில்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார். சிறுவர்களின் உள்ளத்தில் நல்ல சிந்தனைகளை விதைத்தால் நாடு முன்னேற்றம் என்ற விளைச்சலை நிச்சயமாகப் பெறும் என்று நம்புகிறார். ஊழல், லஞ்சம், கலவரம், அவலம், போன்றவற்றை ஒழித்துவிடலாம் என்று உறுதி கொள்கிறார்.

சிறுவர்களிடம் அன்பு செலுத்தி அவர்களின் கவனத்தைத் தீய சக்திகள் இழுத்துக்கொள்ளாமல் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். இன்றைய சிறுவர்கள் நாளைய சமுதாயச் சிற்பிகள். அவர்களை உருவாக்க வேண்டிய முழுப்பொறுப்பு பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் சார்ந்தது. நல்ல நூல்களில் நல்ல வாழ்க்கைமுறைகள் உள்ளன. நல்ல பாடல்களில் நல்ல கருத்துக்கள் உள்ளன. அவற்றைச் சிறுவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து மனவளமாக வளர்க்கவேண்டும். எழுத்தாளர் ஆசி. கண்ணம்பிரத்தினம் அவர்கள் எழுதியுள்ள 'அறிவூட்டும் சிறுவர் பாடல்கள்' என்னும் இந்நூல் பயனூட்டும் நூல்.