
பாவேந்தரும் விளிம்புநிலை மக்களும்
Pavendarum Vilimbunilai Makkalum
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பன்னீர் செல்வம்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :98
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177355369
குறிச்சொற்கள் :பெருங்கவிகள், தலைவர்கள், சரித்திரம், போராட்டம்
Out of StockAdd to Alert List
கலை கலைக்காகவர்; மக்களுக்காகவா? என்ற கருத்தாக்கத்தின் பின்னணியில்தான நம் தமிழ்க் கலைகள் வளர்ந்து வந்துள்ளன. அவற்றுள் தமிழ் இலக்கியமென்பது சங்க இலக்கியம் தொட்டே மேற்சொன்ன கருத்தாக்கப் பின்புலத்தில் இன்றுவரை நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. மார்க்சியவாதிகள் மட்டும்தான் இதற்கு மாறாக மக்களை உணராத எந்த கலை வடிவமும் ஏற்றுக்கொள்ளப்படாதது என்கிறார்கள். நம்முடைய அறிவுக்கு உட்படுத்தி இக்கருத்தை ஆராய முனைவோமாயின மார்க்சியவாதிகளுடைய கலை சார்ந்த வரைவை ஏற்றுக்கொள்வதே சாத்தியமாகிறது.
கலை கலைக்காக என்பது முதலாளித்துவத்தின் கலை சார்ந்த அடையாளம். அதை தகர்த்தெறிவது அடித்தட்டு மக்களின் அவலத்தைப் பேசும் கலை வடிவங்கள். மேல்வர்க்க சொகுசு வாழ்வை இலக்கியமாக்கி, அதைப் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்த்து வந்த அடிவருடிகளைப் புறந்தள்ளிவிட்டு அதே இலக்கியத்தைப் பிரச்சாதப் பொருளாக்கி புனைவை மனித வாழ்வோடு பிணைத்து வெகுவிரைவில் சமூகத்திற்கு வெளிக்கொணர்ந்தவர்கள் பாரதியார், பாரதிதாசன் போன்ற பெருங்கவிகள்.
