book

கலையும் இலக்கியமும்

kalaiyum ilakkiyamum

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா சே துங்
பதிப்பகம் :தமிழ்ப்புத்தகாலயம்
Publisher :Tamil Puthakalayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :68
பதிப்பு :6
Published on :2013
Out of Stock
Add to Alert List

தோழர்களே! இலக்கியம் கலைக்கும், பொதுவான புரட்சிகரமாயுள்ள கடமைக்கும் இடையிலுள்ள சரியான உறவைப்பற்றி நாம் விவாதிக்கவும், நமது இலக்கியத்தையும், கலையையும் சரியாக வளர்க்கவும், நமது புரட்சி இதர புரட்சி நடவடிக்கைகளுக்கும் பலமான ஆதாரமாக அவைகளை ஆக்க வழிவகை வகுக்கவும் நீங்கள் அழைக்கப் பட்டிருக்கிறீர்கள். இத்தகைய விவாதங்களின் மூலமாக, நமது தேச விரோதிகளைத் தோற்கடித்து, நமது தேச விடுதலைக் கடமையை நிறைவேற்றவும் நம்மால் முடியும். சீன தேசத்தை விடுவிக்கும் நமது போராட்டம், பல முனைகளிலும் - கலாச்சார முனையிலும், ராணுவ முனை யிலும் நடத்தப்பட்டு வருகின்றது. நமது விரோதிகளை நாம் முறியடித்து வெற்றி பெறுவது, பிரதானமாக, துப்பாக்கி ஏந்தி நிற்கும் சிப்பாய்களையே பொறுத்திருந்தாலும், சிப்பாய்கள் மட்டும் இதற்குப் போதாது. தேசத்தை ஒன்றுபடுத்தி, எதிரியை முறியடிக்கும் கடமையை நிறைவேற்றுவதற்கு ஒரு கலாச்சாரப் படையும் நமக்கு இருக்க வேண்டும்.