book

புகழேந்திப் புலவரின் நளவெண்பா

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர் கேசிகன்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2019
Add to Cart

புகழேந்தியாரின் காலம், தமிழின் பொற்காலமெனும் ஓர் ஒப்பற்ற காலமாகும். கவிராட்சதரான ஒட்டக்கூத்தரும் கவியரசான கம்பரும், மற்றும் சயங்கொண்டார் போன்ற புலவர் பெருமக்களும் தமிழின் சீர்மையைப் பெருக்கி வந்த காலம் அது! அந்தப் பொற்காலத்தே எழுந்த நளவெண்பாவும் ஒப்பற்ற தமிழ்க் கருவூலமாகவே மிளிர்கின்றது. புகழேந்தியார், சிலகாலம் வள்ளுவ நாட்டைச் சார்ந்த சந்திரன் சுவர்க்கி என்பானின் ஆதரவில் இருந்தபோது, அவன் விரும்பிக் கேட்டுக்கொள்ளச் செய்ததே இந்நூல் என்பார்கள். அதற்குச் சான்றாக, தம்பால் அன்புடைய சந்திரன் சுவர்க்கியைத் தம் நூலின் தக்க இடங்களில் அமைத்து, இவர் பாடியிருப்பதனையும் காணலாம்.