book

நமது கீதை

Namathu Geethai

₹299+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறிஞர் அண்ணா
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :348
பதிப்பு :10
Published on :2010
Add to Cart

அகில இந்திய ஆரிய தர்ம சேவாசங்கத்தார் -தயவு செய்து பெயரை மறவாதீர்! கீதை ஜயந்தி கொண்டாடினார்களாம். - அதற்கு ஆசி மொழி அனுப்பிய ஆச்சாரியார், "உன் கடன் பணி செய்து கிடப்பதே. மனிதவர்க்கத்தின் நன்மைக்காகவே என்றும் உழைக்க வேண்டும், சொந்த நன்மையை நாடாதே" - என்ற இவைகள் கீதா ரகசியம், இந்த உண்மைகளை எந்த மதம் போதித்தாலும் அது கீதையின் தத்துவந்தான். பேரும் முறையும் எவ்விதமிருப்பினும் இருக்கட்டும். அதைப் பற்றி கவலையில்லை" என்று தெரிவித்திருக்கிறார். எங்கு தங்கள் "கொள்கை"யின் சாயலோ, சாரமோ இருப்பினும், அது தம்முடையது என்று கொள்வது ஆரிய தர்மம் என்று, ஆச்சாரியா அறிவிக்கிறார். அதே முறையிலே தான், குளத்தங்கரை கனபாடிகள், ஜப்பான் ராஜா பிதிர்தேவதைகளிடம் பேசினது ஆரியம் என்று அகமகிழ்கிறார். கீதையிலிருந்து ஆச்சாரியார் எடுத்துக் காட்டும் கருத்து, பொதுநீதி - எனவே அது எந்த மார்க்கத்திலுந்தான் இருக்கு.