ஆதிசங்கரர் அருளிய பஜகோவிந்தம் (மோக முத்கரம்)
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. ராஜகோபாலன்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2013
Add to Cartப⁴ஜ கோ³விந்த³ம் ப⁴ஜ கோ³விந்த³ம்
கோ³விந்த³ம் ப⁴ஜ மூட⁴மதே । ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே நஹி நஹி ரக்ஷதி டு³க்ருʼங்கரணே ॥ 1॥
1) கோவிந்த கோவிந்த கூவிடுவாய் ஏமூடா
சேவித்து நீஉய்யும் சீலமிது .. ஆவிஏகும்
பாவியுந்தன் அந்திமநாள் பத்தியின்றிக் கற்றதெல்லாம்
மேவியுனைக் காவாது காண்
மூட⁴ ஜஹீஹி த⁴நாக³மத்ருʼஷ்ணாம் குரு ஸத்³பு³த்³தி⁴ம் மநஸி வித்ருʼஷ்ணாம் । யல்லப⁴ஸே நிஜகர்மோபாத்தம் வித்தம் தேந விநோத³ய சித்தம் ॥ 2॥
2) சொத்துகள் மீதுற்ற சூதான பற்றொழி
புத்தியால் பெற்றவை போற்றுவாய் ..மெத்த
உழைப்பின் உயர்வை உளத்தில் இருத்திப்
பிழையற வாழ்தலே பீடு