book

தமிழர் தோற்றமும் பரவலும்

Tamilar Thotramum Paravalum

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் கா. கோவிந்தன்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :126
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

பழந்தமிழ் நாகரீகத்தின் வரலாற்று ஆசிரியர்கள்

வரலாற்றினும், நில இயல் அறிவு நூல், நனிமிக முந்தியது எனச் சொல்லப்படுகிறது. நிலநூல் ஆசிரியர்களின் கருத்துப்படி, தென்னிந்தியா, மற்றும் இலங்கையின் பழமை, நிலஇயல் அறிவின் தொடக்க காலத்துக்கே கொண்டு செல்கிறது.

ஏழத்தாழ 4500 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி, 500 கோடி ஆண்டுகளுக்கு முன் வரையான 'முந்தைக் கேம்பிரியன்' என்ற நிலஇயல் ஊழிக்காலத்திற்கும் (Pre cambrain Era), 240 கோடி முதல் 65 கோடி ஆண்டு வரையான 'மெலோ ஸோயிக்' என்ற இடைப்பேருழி ஊழிக்காலத்திற்கும் (Mesozoic Era) இடைப்பட்ட காலமாம் பலேயோஸோயிக் (Palaeozoic) தொல்பேரூழி என்ற ஊழிக் காலத்திலிருந்தபடி மூன்றுபக்கங்களிலும் கடலால் சூழப்பெற்ற இந்தியத் தீபகற்பம் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் நடுவிடமான ஆஸ்திரேலியா முதல், தென் அமெரிக்கா வரையான கோண்டவனம் என்ற பெருநிலப் பரப்பு இருந்தது. மெலோஸோயிக் ஊழியின் இறுதிக் காலத்தே, கோண்டவனம் என்ற இப்பெருநிலப்பரப்பு உடைந்துவிட்டது. பெரும்பகுதி கடலுக்குள் சென்றுவிட்டது. ஆஸ்திரேலியா இந்தியா, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா முதலாயின தனித்தனி நாடுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டன.

ஆனால், இந்தியாவும், ஆப்பிரிக்காவும் மட்டும் அக்காலகட்டத்திலும் பிரிவுறாமல், பெருங்கற் பாறையாம் பாலத்தால் இணைந்திருந்தன. அவ்வாறு இணைந்திருந்த அப்பகுதிக்கு “லெமூரியா” என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது. மெஸோஸோயிக் ஊழிப்பருவத்தைச் சேர்ந்த 200 முதல் 150 கோடி ஆண்டுகள் வரையான “ஜுராஸிக் (Jurassic) என்ற வரலாற்றுக் கால கட்டத்தில், தென் அமெரிக்காவில் வடகிழக்கில் உள்ள பிரேஸின் நாட்டில் உள்ள ஜலுரா என்ற மலையில் பாறை தோன்றிய காலம் இந்தியத் தீபகற்பத்தின் கீழ்ப்பால் பகுதி கடலுள் மூழ்கிவிட, வங்காள விரிகுடாவின் தோற்றத்திற்கு வழிவகுத்து விட்டது.

(சொற்பொழிவின் ஈற்றில் உள்ள குறிப்பு:1 காண்க). பனிக்கட்டி காலமாம் ‘கிலேசியல்’ (Glacial) ஊழியின் இறுதியில் தாழ் நிலையில் இருந்த கடல்மட்டம் பனிப்பாறைகள் உருகியதால் மீண்டும் உயர்ந்து நனிமிகப் பரந்த கடல் நீரடிப்பாறை உருவாகும் நிலைக்கு வழிவகுத்தது. இக்காலகட்டத்தில்தான் சுமத்திரா, ஜாவா மற்றும் போர்னியோ போலும் கிழக்கிந்திய நாடுகள் பிரிவுண்டு தனித்தனி நாடுகள் ஆயின. இந்நிலஇயல் நிகழ்ச்சி. வேதம், இதிகாசம், புராணங்களில் பெரும்பிரளயங்களாக, அதாவது கடல்கோள்களாக விளக்கப்பட்டுள்ளன. இப்பேரழிவு நடைபெற்ற காலத்தில் வாழ்ந்திருந்த மனுவே, மனித இனத்தின் தந்தை ஆனார்.