book

உடல் பேசும் ஊமை மொழி

Utal Peasum Oomai Mozhi

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ஏ.ஆர். ராமராஜூ
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :110
பதிப்பு :1
Published on :2013
Out of Stock
Add to Alert List

உடல் பேசும் மொழி என்றால் என்ன? முதற்கண் உடல் பேசும் மொழியை வரையறை செய்வோம். நமது உடலின் பல பாகங்களான முகம், தலை, கைகள், மற்றும் கால்கள் உள்ளன. உடல் முழுவதுமாக சில சைகைகள் மற்றும் இயக்கங்கள் மூலமும் நமது எண்ணங்களையும் உணர்வுகளையும் உ பிறருக்கு வாய் பேசாமல் வெளிப்படுத்துவதே உடல் பேசும் மொழியாகும். நமது உடல்பேசும் மொழியானது, நாம் என்ன உணர்கிறோம், என்ன நினைக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் ஒருவர், மற்றொருவர் என்ன உணர்கிறார்? என்ன நினைக்கிறார்? மற்றும் என்ன செய்யப் போகிறார்? என்பதை அவர் உடல் சைகைகள் மூலம் அறிந்துகொள்ளலாம். “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்ற பழமொழிக்கேற்ப ஒருவர் என்ன நினைக்கிறார், உணர்கிறார் என்பதை அவர் முகம் மற்றும் உடலின் பாகங்கள் மூலம் நாம் உணர முடியும். உங்கள் முகத்தை வைத்துக்கொண்டு அது. வெளிப்படுத்தும் சில சைகைகள் மூலம் நீங்கள் உணர்வது நினைப்பது போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம்.