book

ஸர்வ மங்களம் தரும் ஸ்ரீ லிங்க புராணம்

Sarvamangalam Tharum Sri. Sivalinga Puranam

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகர்கோவில் கிருஷ்ணன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2009
Out of Stock
Add to Alert List

பிரம்மதேவரால் சிருஷ்டிக்கப்பட்ட நைமிசாரண்யத்தபோவனம் அருந்தவம் புரியும் ஞானியர்கள் தவமியற்றும் அறச் சாலை! வேள்விப்புகையும் வேதகோஷமும் இணைந்து காணும் சுந்தரபூமி! அல்லும் பகலும் பதினெண் புராணங்கள் இடையறாது ஒலித்துக் கொண்டிருக்கும் புண்ணிய க்ஷேத்திரம்! கங்கை நதியானவள், பகீரதனுக்காகப் பொங்கி பிரவாஹம் எடுத்து வந்த புனித தீர்த்த தலம்! விரிசடை அண்ணலான ஈசனின் திரிசடையில் அலங்கரிக்கும் வண்ண மலர்களைத் தாங்கி வரும் கங்கையின் மகிமையால் நைமிசாரண்ய வனம் நறுமணமும் தூய்மையும் பெற்று எந்நேரமும் திருக்கயிலைத் திருமாமாலை நந்தவனம் போல் காணப்படும்.