book

காதல் மீது விழுந்த இதயம்

Kaadhal Meedhu Vizhundha Idhayam

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஈரோடு இறைவன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184461459
Add to Cart

மடை திறந்த வெள்ளம்போல் மேடைகளில் முழக்க மிடும் ஈரோடு இறைவன் தி.மு.க தலைமைக்கழக பேச்சாளர்களில் முன்வரிசையில் இருப்பவர். தலைவர் கலைஞர் அவர்களின் முத்தமிழ் இலக்கியத் தால் ஈர்க்கப்பட்டு இளைய கலைஞர் தளபதி, மு.க.ஸ்டாலின் அவர்களின் பின்னால் அணிவரிசையில் நிற்கும் ஈரோடு இறைவனின்எழுத்துக்களில் ஈரோட்டுப் பகுத்தறிவு பளிச்சிடக் காணலாம். கலைஞர் மற்றும் பாரதிதாசன் இவர்களின் கவிதைகளின் தாக்கத்தினால் கவிதையின்பால் காதல் கொண்டு) எழுதத் தொடங்கியவர். கவிதை, கதை, கட்டுரைகளில் தனித்தனி நடை போட்டு முத்திரை பதித்து வரும் ஈரோடு இறைவனின் தந்தையார் திரு. கைவல்யம், தாயார் திருமதி மங்கையர்க்கரசி, துணைவியார் திருமதி. மு. சுகந்தி. இதுவரை ஈழத்தில் கண்ணீர் சாலை, தமிழால் முடியும், காதல் மீது விழுந்த இதயம், காதில் ஒரு காதல், கண்ணாடி முகங்கள், விழியோரம் காதல், காற்றுக்குள் யாழும் குழலும், ஆகிய கவிதைத் தொகுப்புகளும், மலர் களில் மழை, கதம்பம் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், தொப்புள் கொடி உறவு என்னும் நாவலும், இன்பம் இலவசம் என்னும் கவிதை நாவலும் படைத்து வாசகர்களின் உள்ளங்களில் குடிக்கொண்டிருப்பவர்.