book

நான் யார் தன்னிலை விளக்கம்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.எம். வாசகம்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :48
பதிப்பு :3
Published on :2012
ISBN :9788184460728
Add to Cart

கடல் சூழ்ந்த இப்பூவுலகின் கண்ணே பெறுதற்கு அரிய ஆறறிவுடைய மனித தேகத்தைப் பெற்றுக்கொண்ட ஜீவர்களாகிய நாம் இத்தேகம் உள்ளபோதே அறிந்து அடையவேண்டியது ஒன்று உண்டெனில் அது “நான் யார்?” என்பதே ஆகும். அப்படி நான் யார் என்று அறிவதனால் நமக்கு என்ன பயன் என்ற ஒரு வினா எழுவது அனைவருக்கும் இயல்பே ஆகும்.
“தன்னை அறிய தனக்கு ஒரு கேடு இல்லை ” என்ற அழிவில்லாத நித்திய பேரின்ப சித்திப் பெருவாழ்வே பயன் என தமது திருமந்திரத்தில் திருமூலர் கூறுகிறார். இந்த உண்மையைத்தான் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருவண்ணாமலையில் வாழ்ந்து, நான் யார் என்ற தன்னிலை விளக்கம் பெற்று தானும் இன்பமாக வாழ்ந்து நம் மக்களுக்கும் இன்பமாக வாழ பகவான் ரமணர் “நான் யார்” என்ற உபதேசத்தை அருளினார்கள்.