தமிழ்க் கவிதைகளில் பெண்கள் (சங்க காலம் முதல் தற்காலம் வரை)
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஆர். ரகுநாதன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :400
பதிப்பு :1
Published on :2013
Add to Cart "சங்கத் தமிழ் இலக்கியங்களில் பெண்கள் மிகவும் உயர்வாகப் போற்றப்பட்டாலும் அவர்களுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் பறிக்கப்பட்டே இருந்தன என்பதற்கு அவ்விலக்கியங்களே சான்றாவதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.
""கணவன் இல்லாதபோது தங்களைப் புனைந்து கொள்ள மாட்டார்கள்; இதுவே பழந்தமிழ்ப் பெண்களின் பண்பு' என்பதைச் சிலப்பதிகாரமும், ""பெண்கள் தங்கள் குடிப்பெருமையைக் காப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர்' என்பதைப் புறநானூறும், ""பெண்கள் விருந்தோம்பலில் சிறந்திருந்தனர்' என்பதைக் கம்பராமாயணம், புறநானூறு ஆகிய நூல்களும், ""தங்கள் கணவர் தேடித் தரும் செல்வத்தைக் கொண்டே இல்வாழ்க்கை நடத்தினர்' என்பதை நற்றிணையும், ""கணவன் கருத்துப்படியே மனைவியர் வாழ்க்கை நடத்தினர்' என்பதை சிறுபாணாற்றுப்படையும், ""நல்ல குடும்பத்துப் பெண்கள் தமது கையாலேயே கணவனுக்கு உணவு பரிமாறுவார்கள்' என்பதைக் குறுந்தொகையும் - இவ்வாறு சங்க இலக்கியங்கள் பலவும் பெண்ணின் பெருமையைப் பேசினாலும், அன்றைய பெண்கள் சமுதாயத்தில் அடிமையாகவே நடத்தப்பட்டுள்ளனர்.
தொல்காப்பியர், திருவள்ளுவர், வள்ளலார், பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., ஜீவா, பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம், கண்ணதாசன் போன்றோர், தங்கள் கவிதைகளில் பெண்களைப் பற்றி வடிக்கும்போது எத்தகைய கண்ணோட்டத்தில் பார்த்தார்கள் என்பதையும், இன்றைக்குள்ள பெண் கவிஞர்களின் பெண் எழுத்தில் உருவான கவிதைகளையும் பதிவுசெய்துள்ளார் நூலாசிரியர்.
பாலியல் வன்முறை, பெண் சிசுக் கொலை, வரதட்சணைக் கொடுமை, பெண் விடுதலை போன்றவை அலசி ஆராயப்பட்டுள்ளன. இன்றையப் பெண்கள் அனைவரும் கட்டாயம் ஒரு முறையாவது இந்நூலைப் புரட்டிப் பார்த்து விழிப்புணர்வு பெறவேண்டியது அவசியம்."