book

யாத்திரை போகலாம் வாங்க!

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப்ரியா கல்யாணராமன்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :2
Published on :2012
Add to Cart

கணவரின் குறட்டை ஒலி மஞ்சுளாவின் தூக்கத்தைக் கலைத்துவிட்டது. அவள் திரும்பிப் படுத்தாள். கணவரின் குறட்டை ஒலி தொடர்ந்தது தவிர குறையவில்லை.ஒருதரம் தூக்கம் குழம்பிப்போனால் அவளால் நீண்ட நேரம்வரை தூங்க முடியாது.கணவர் எவ்வளவு நிம்மதியாக நித்திரை கொள்கிறார்? நித்திரையின் ஆழத்தில் கனவுகளும் வந்து போகலாம். என்ன கனவு காணுவார்? வெளி மனதின் நினைவோட்டங்கள் அடிமனதின் அலைச்சல்கள், உள்ளத்தின் உறுத்தல்கள் எல்லாம் வருமா?அவர் நிம்மதியாகத் தூங்குகிறார் ஆனால்;,இரவுச் சாப்பாட்டின் பின் மஞ்சுளாவின் கணவர் ஏதோ சாதாரண விசயமாகச் சொல்லிய செய்தி அவளின் இப்போது மனதைக் குடைகிறது.வீட்டில் பருப்பு முடிந்துவிட்டது என்றால் அவரிடம் சொல்லிவிடுவாள். குழந்தைகளின் பாடசாலைச் செலவுக்கு அவரிடம் கேட்டுத்தான் காசு கொடுப்பாள். பதினைந்து வருடத் திருமணத்தில் அவருக்குத் தெரியாமல் அவரைக் கேட்காமல் ஒரு சதமேனும் செலவளித்திருக்கமாட்டாளே!அவர் எவ்வளவோ செலவளிக்கிறார். அவள் விளக்கம் கேட்பதில்லை. ஆனால், இன்று அவர் சொன்ன விடயம் செலவில் மட்டும் தங்கியிருக்கவில்லையே.