book

சிறுதொழில் துவங்குவது எப்படி?

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. அய்யாத்துரை
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123420240
Out of Stock
Add to Alert List

படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி தேடிக்கொண்டிருப்பவராக இல்லாமல், சுயதொழில் புரிபவராக மாறவேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் மாவட்ட தொழில் மையங்கள்.
இந்த மையங்களின் உதவியால் சுயதொழில் தொடங்கி முன்னேறியவர்கள் தமிழகத்தில் ஏராளம். சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் தமிழகத்தில் ஏராளமாக பெருகி இருப்பதற்கு மாவட்ட தொழில் மையங்களும் முக்கிய காரணம்.
படித்த இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம், உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியை அளித்துவருவது குறிப்பிடத்தக்கது. பொது மேலாளர் தலைமையின் கீழ், இயங்கி வரும் மாவட்ட தொழில் மையமானது, புதிய தொழில் முனைவோருக்கு தேவையான பயிற்சியை வழங்குவதோடு தொழில் ஆலோசனைகளையும் வழங்குகிறது.
தொழில் வளர்ச்சியின் தேவைக்கேற்ப செயலாற்றி வருவது இம்மையத்தின் சிறப்பம்சம். எனவேதான் தொழிற்சாலைகளை நவீனப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்தின் தரத்தினை மேம்படுத்துவதற்குமான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.