book

கன்ஃபூஷியஸின் கருத்துப் பெட்டகம் (கன்ஃபூஷியஸின் வாழ்வு வாக்கிலிருந்து தேர்ந்தெடுத்த முத்துக்கள்)

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அகிலன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184025323
Add to Cart

கன்ஃபூஷியஸின் போதனைகள் கண்டிப்பாக ஏட்டுச் சுரைக்காய் கிடையாது. மிக உண்மையாகப் பின்பற்றக்கூடியவை. வாழ்வின் உன்னதத்தை உணர்த்துபவை. அற்புதமானவை. வாழ்நாள்முழுவதும் மக்களுக்காகவே சிந்தித்துக்கொண்டிருந்த மகான், கன்ஃபூஷியஸ். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் கன்ஃபூஷியஸின் தத்துவங்களை யாருமே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அரசர்கள் முதல் அதிகாரிகள் வரை, ஏன் சாதாரணப் பொதுமக்கள்கூட ஏற்றுக்கொள்ளாமல் அலட்சியப்படுத்தினார்கள்.

ஆனால் இன்று, அவர் மறைந்து சில ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும், உலகெங்கும் லட்சக்கணக்கான மக்கள் கன்ஃபூஷியஸின் தத்துவங்களைத் தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர் சொல்லித்தந்த உண்மைகள் இந்த நவீன யுகத்திலும் இம்மி பிசகாமல் பயனளிக்கின்றன.