வேங்கடம் முதல் குமரி வரை அழகிய படங்களுடன்
₹800
எழுத்தாளர் :தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :927
பதிப்பு :1
Published on :2009
Add to Cart "இந்தப் புத்தகத்தைக் கோயில்களுக்குப் போவதற்கு முன்பு படித்தால் ஒருவகை இன்பம் உண்டாகும்; போய் விட்டு வந்து படித்தால் அந்த இன்பம் பின்னும் பன் மடங்காகும். வெறும் ஆராய்ச்சியானால் அலுப்புத் தட்டும்; புராணமானால் சுவை இராது. சமய நூலானால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தோன்றும்; சரித்திர நிகழ்ச்சியானால் அவசியமானபோது புரட்டிப் பார்க்கலாம் என்று வைத்து விடுவோம்; பாடல்களானால் அமைதியாக இருந்து பார்த்தால் தான் விளங்கும் என்ற அச்சம் உண்டாகும். இந்த நூலில் இவை எல்லாம் இருக்கின்றன. ஆனால் படித்து முடித்து விடவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றன; படித்த பிறகோ பல தலங்களுக்குப் போய்ப் பல மூர்த்திகளை வழிபட்டு வந்த மனநிறைவு உண்டாகிறது.
- கி.வா. ஜகந்நாதன்"