சித்தர் களஞ்சியம் (பாகம் 2)
₹237.5₹250 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :464
பதிப்பு :1
Published on :2009
Add to Cart''சித்தர்கள்
வாழ்க்கை ரகசியங்கள் அனைத்தும் அறிந்த ஞானிகள். இயல்பான மனிதர்களிடம்
இருந்து வேறுபட்டு பல அதிசய - அற்புத சக்திகளை உள்ளடக்கிய மானிட உருவில்
உள்ள - தேவர்கள். நீரின் மேல் நடக்கவும், நெருப்பின் மேல் உறங்கவும்,
நிழலுக்குள் ஒதுங்கவும் ஆற்றல் பெற்றவர்கள், மூலிகைத் துறை யில் நிரம்ப
அறிவு பெற்றவர்கள். இரும்பைப் பொன்னாக்கும் ரஸ வித்தை அறிந்தவர்கள். ஒரே
நேரத்தில் இரண்டு இடங்களில் காட்சி தர வல்லவர்கள். காடுகளிலும் மலைகளிலும்
அலைந்து திரிவார்கள் - குகைகளில் தங்குவார்கள். எளிய மக்களிடம் பரிவு
உடையவர்கள். அதிகாரம் செய்பவர்களுக்கு பணியாதவர்கள். கடவுள் நம்பிக்கை
உடையவர்கள்.'' தமிழ்நாட்டில் அறியப்பட்ட, அறியப்படாத எல்லாச் சித்தர் களும்
இந்த வரையறைக்குள் அடங்கிவிடுவர். சித்தர்கள் பதினெட்டுப் பேர் என்பது
பொது வழக்கு. ஆனால் தமிழ்நாட்டில் ஏராளமான சித்தர்கள்
வாழ்ந்திருக்கிறார்கள் - பழனி - திருவண்ணா மலை - பொதிகை மலை ஆகியன
சித்தர்கள் நிறைய வாழ்ந்த இடங்களாகக் கருதப்படுகிறது.