
வேளாண் வல்லுநர் அக்ரி. ஜேம்ஸ் பிரடெரிக்
₹500
எழுத்தாளர் :அழகிரி பாண்டியன்
பதிப்பகம் :புத்தகப் பூங்கா
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :432
பதிப்பு :1
Published on :2025
Add to Cartதொழிலதிபர் ஜேம்ஸ் பிரடெரிக் வாழ்க்கை வரலாற்று நுால். ஏழைக் குடும்பத்தில் பிறந்து முயற்சியுடன் முன்னேறியதை கதை போல் விவரிக்கப்பட்டு உள்ளது. வேளாண்மை தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்ததன் வழியாக பசுமை புரட்சியில் பங்கு வகித்த நிகழ்வுகள் தொகுத்து தரப்பட்டுள்ளன. சொட்டு நீர் பாசனம், பூச்சிக்கொல்லி உற்பத்தி என கடுமையாக உழைத்து தொழிலதிபராக உயர்ந்ததை படம் பிடிக்கிறது. வாழ்க்கையை, இளமைக்காலம், தொழில், தொழிலதிபர், சமூகத்தொண்டு, குடும்பம், சாதனை என பிரிவுகளாக்கி தகவல்கள் தரப்பட்டுள்ளன. அரசு, அரசியல் பிரமுகர்களுடன் கொண்டிருந்த தொடர்புகளும் சுவைபட கூறப்பட்டுள்ளது. முன்னேற உத்வேகம் தரும் நுால்.
இந்திய சொட்டுநீர்ப் பாசனத்தின் இணையில்லாத் தந்தை! வறண்டு கிடந்த இந்திய வேளாண்மைத் துறையைச் செழிக்க வைத்த ஜீவ நதி!தன் ஆளுமையால் திருபாய் அம்பானியையே திகைக்க வைத்த தென்னிந்திய அம்பானி! பூச்சியியல் துறையில் புதிய சிந்தனைகளைப் போதித்த புத்தன்! இருண்டு கிடந்த இந்திய வேளாண் துறையில் புதுமையாய்ப் புறப்பட்ட புதிய ஒளிக்கீற்று! இளமையில் கண்ட கனவுகளை எல்லாம் நனவாக்கிக் காட்டியதால் இன்று 'இளைஞர்களின் கன'வாக இருப்பவர்! சாதனையின் சிகரம்! சரித்திரத்தின் உயரம்! பணக்காரர்களின் வரிசையில் ஆயிரத்தில் ஒருவன்! பண்புள்ளோரின் வரிசையில் கோடியில் ஒருவன்!
