book

கலைஞரின் கடிதங்கள் காலத்தின் கல்வெட்டு

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நீரை மகேந்திரன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :20
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789395523745
Add to Cart

அண்ணாவைத் தொடர்ந்து எழுதத் தொடங்கிய கலைஞர், கடித இலக்கியத்தை ஒரு சொல்லின் மூலம் மரபு மாறாமல் இறுதிவரை எழுதினார். பொதுவாக கட்சித் தொண்டர்களுக்கு உடன்பிறப்பே என்ற விளிப்புடன் கடிதத்தைத் தொடங்குவார். அதுபோகப் பழைய நண்பனே, மாஜி நண்பா என்ற விளிம்புடனும் சில கடிதங்கள் குறிப்பிட்ட நபர்களுக்கு எழுதியிருப்பார்.

கலைஞரின் கடிதங்கள் அரசியல் செய்திகளோடு நாட்டு நிகழ்வுகளையும் பொருளாதார, கலாச்சார, சமுதாயத் துறைகளில் போக்குகளையும் ஆய்வு செய்வதாக அமைந்திருக்கும். அவரது கடிதங்களில் முக்கியக் கூறுகளாக சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, மொழி உணர்வு   ஆகியவற்றுடன் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியத்தின் செல்வாக்கும் மிகுந்திருக்கும்.