
கலைஞரின் நகைச்சுவைகள்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மேலைச்சிதறல் கோமகன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :2
Published on :2024
ISBN :9789395523752
Out of StockAdd to Alert List
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து துறைகளிலும் சம உரிமையும், சமவாய்ப்பும், சமதர்மமும் நிலவவேண்டும், எல்லா மக்களும் தங்கள் விருப்பப்படி வளர்ச்சியடைவதற்கு முழுமையான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தம் வாழ்வை முழுமையாக அகற்றவேண்டும் என்ற நோக்கத்தில் தம் வாழ்வை முழுமையாக தமிழருக்காகவே அர்ப்பணித்த உன்னதத் தலைவர் கலைஞர். சமூக நீதிக்கும் சம வாய்ப்புக்கும் குறுக்கே நிற்கும் தடைகளை முழுமையாக அகற்றவேண்டும் என்று போராடி வெற்றிகண்டவர் கலைஞர்.
அவரின் நகைச்சுவை கலந்த மேடைப்பேச்சும், கருத்து விளக்கமும் அவர் கூறும் உவமைகளும், சமுதாயச் சூழலைச் சுட்டிக்காட்ட அவர்கூறும் சின்னஞ்சிறு கதைகளும் மக்களின் உள்ளங்களில் என்றென்றும் நிலைபெற்றிருப்பவை.
கலைஞரின் நகைச்சுவைகள் ஒவ்வொன்றும் சிரிப்போடு சிந்தனையையும் தூண்டும் பெருமையுடையவை. அவற்றில் சிலவற்றை மட்டும் தொகுத்து வழங்கியுள்ள மேலைச்சிதறல் கோமகனின் முயற்சி மிகவும் பாராட்டுதற்குரியது.
