book

மறையாத சூரியன்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெ. இராஜாராம் பாண்டியன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :186
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788197183768
Add to Cart

கலைஞரைப் பற்றி  ஏராளமான நூல்கள் வந்திருக்கின்றன. ஏன் அவரே எழுதிய '' நெஞ்சுக்கு நீதி'' யில்  தன்னைப் பற்றியும். தான் சார்ந்திருந்த  இயக்கத்தின் வளர்ச்சி பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார்.

இந்த நூலாசிரியர் இவற்றையெல்லாம் தொகுத்து ஒன்றைக்கூட விடாமல் சுருக்கமாக எழுதியிருக்கிறார். அவரின் இளமைக்காலம். பிறந்த ஊரின் வரலாறு. குறிப்பாக ''திருக்குவளை'' என்ற ஊரின். சிறப்பு. இறமைக்காலம், கல்வி, படிக்கும்போதே அவர் கொண்டிருந்த மொழிப்பற்று, சமூகநீதியின் பால் அவர் கொண்டிருந்த உறுதி, திராவிட இயக்கத்தில்  அவர் கொண்டிருந்த சிந்தனை, பழமையின் மீது அவர் கொண்டிருந்த கோபம் திராவிட இயக்கத் தலைவர்கள் அவர் மேல் வைத்திருந்த மரியாதை, இவற்றைப் பற்றியெல்லாம் ரத்தின சுருக்கமாக சொல்லியிருக்கிறார். 

கலை உலகில் இலக்கியத் துறையில் சமூக வளர்ச்சியில் அவர் ஆற்றிய பங்கு போன்றவற்றையெல்லாம் அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய வகையில் நூலாசிரியர் சொல்லியிருக்கும் விதம் மிகவும் பாராட்டுக்குரியது. மொத்தத்தில் இது ஒரு ''கலைஞர் களஞ்சியம்'' சிறக்கட்டும் நூலாசிரியர் பணி.