book

ஶ்ரீ முத்துக்கண்ணு மாரியம்மன் பாடல்கள்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாவலர் ந. சந்திரசேகரன்
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2024
Add to Cart

ஒருகால் நூற்றாண்டையும் கடந்து காற்று விமானத்தில் காலச்சக்கர விமான வாகனத்தில் கடவுளர்களின் கருணையினால் காருணயம் செய்யப்பட்ட கருப்புச் சிலை வடிவத்தில் இந்த பூலோக மக்களை காப்பதற்காக தாய் பார்வதி தேவி அவதாரம் எடுத்து "முத்துக் கண்ணு மாரி" என்ற பெயரில் இந்தத் தீரன் நகரில் அறியாற்றங்கரையின் வடகரையில் அழகான நந்தவனத்தில் எழுந்தருளி இன்று கோயில் கொண்டு அமர்ந்திருக்கக் கூடிய அன்னை பராசக்தியே முத்துக்கண்ணு மாரியம்மா இந்தத் திருத்தலம் கடந்த 2000மாவது ஆண்டில் குடமுழக்கு செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்தது. இந்த முத்துக்கண் மாரியம்மா என்ற மாபெரும் சக்தியான இருத் அன்னையின் திருத்தலம் திருச்சீராப்பள்ளி மலைக்கோட்டையில் இருந்து தென்மேற்கு மூலையில் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கோரையாற்றுக்கு மிக அருகில் தீரன் நகர் வழித்தடத்தில் தந்தை பெரியார் சாலையில் இலக்கம் சுந்தில்)ல் சக்தி திருத்தலமாக எழுந்தருளிக் காட்சி தந்து கொண்டிருக்கும் அம்மன் திருக்கோயில் முத்துக்கண்ணு மாரியம்மா. அன்னை முத்துக்கண்ணு மாரியின் அருளைப் பாடல்களாக எழுதிய பிறகு அதனைப் புத்தக வடிவமாக வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அப்போதுதான் என் அருமை நண்பர் திரு.சுகபாலா அவர்கள் இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்து, இந்தப் பாடல்களை புத்தக வடிவமாக்கி தரும்படி கேட்டுக் கொண்டோம். இதற்காக மிகவும் சிறந்த கவனம் எடுத்து நான் கேட்டுக் கொண்ட படி இந்த கவிதைகளை புத்தக வடிவமாக்கி தந்திருக்கிறார்கள்.