book

வன்முறை கதைகள்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கு. துளசிதாஸ்
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :122
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789389968620
Add to Cart

கதை சொல்வதும், கதை கேட்பதும் தமிழர்களுக்கு புதிதல்ல. சொல்லப் போனால் கதை கேட்டு வளர்ந்த சமூகம்தான் தமிழ் சமூகம். ஆனாலும் காலம் காலமாக இங்கே சொல்லப்பட்டு வருகின்ற கதைகளில் மூட நம்பிக்கைகளே அதிகமாக இடம் பெறுகின்றன. சமூக மாற்றத்துக்கான  கருத்துக்களும், பகுத்தறிவு கருத்துக்களும் அவற்றில் அரிதாகவே பார்க்க முடிகிறது.

இன்றைக்கு குழந்தைகளின் மழலை மொழி கேட்பதற்கு முன்பே பள்ளிக்கூட சிறைகளில் அடைத்து விடுவதால் அவர்கள் கதை கேட்க முடியாத சூழல் நிலவி வருகிறது. சமீப காலமாக  பெற்றோர்கள் குழந்தைகளிடம் காட்டுகின்ற அன்பிலும் மனித  நேயத்தைக் காட்டிலும் வன்முறையே அதிகமாக இருக்கிறது. பெற்றோர்களே அப்படி என்றால் அவர்களோடு நேரடி தொடர்பில் இருக்கின்ற உறவு, நட்பு, பள்ளிக்கூடம், கல்லூரி, பாடம் நடத்தும் ஆசிரியர்கள், படிக்கும் மாணவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை இன்னொருவர் சொல்லி தெரிய வேண்டியதில்லை.