
கொண்டை ஊசி வளைவில் புதிய வானம் ஜென் கதைகள்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஶ்ரீ வி. முத்துவேல்
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :2
Published on :2024
ISBN :9789389968422
Add to Cartகிராமத்துச் சாலையின் இரு புறங்களிலும் உயர்ந்திருக்கும் மரங்களுக்கேது அடையாளம். நீரருந்தியும் நீராடியும் வாழும் பறவைகளால் ஆற்றக்கேது பாதிப்பு. வெள்ளமோடும் நதியைக் கடக்கும் நிலவிற்கேது அவசரம். பல வண்ணச் சிற்றுயிர்களைப் பசியாற்றும் பல வண்ண மலர்களுக்கேது பாகுபாடு. ஒவ்வொரு புதிய விடியலிலும் கண்விழிக்கும் சூரியனுக்கேது சோர்வு. தெறிக்கும் பள்ளத்துச் சேற்றால் மௌனம் கலைக்கும் பூச்செடிகளேது பூமியில். வறண்ட குளத்தில் மழையின் வரவால் அழியும் பாதச்சுவடுகளை எண்ணி வருந்தும் உயிர்களேது. நீரில் விழுந்த பிறகும் தலைகீழாய்க் கால்களசைத்து மீள முயலும் பூச்சியினங்களுக்கேது தோல்வி. இக்கணத்தில் கூடு கட்டும் பறவைக்கு நாளைய பொழுதின் புயலைப் பற்றிய சிந்தனையேது என்று தெளிவுபடுத்துகிறது.
