
பணம் தரும் பயிர்கள்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏற்காடு இளங்கோ
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
புத்தக வகை :பொது அறிவு
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2025
ISBN :9789348474438
Add to Cartநாகரிகமும் பண்பாடும் பெருகப் பெருக, அறிவியல் நுட்பகங்கள் வளர வளர மனிதன் இயற்கையைப் பயன்கொள்ளும் நிலைக்கு மாறினான். உணவுக்காகத் தானியங்களைப் பயிர் செய்தான். இயற்கையாகக் கிடைத்த தானியங்களைப் பயன்படுத்தினான். பயன்பாடுப் பெருகப் பெருக வாழ்க்கை சுகத்துக்கு வழிகளைத் தேடினான். நெல், கோதுமை, சோளம் போன்ற பயிர்களுக்கு அப்பாற்பட்டு வணிகப் பயன்பாட்டால் பணம் தேடும் முயற்சியில் ஈடுபட்டபோது பணப்பயிர் என்னும் பிரிவுநிலை தோன்றியது. அந்த வகையில் ஜாதிக்காய், பாமாயில், மிளகு, தேயிலை, காபி, கரும்பு, மரவள்ளி, கொக்கோ மரம், ரப்பர் மரம், சூரியகாந்தி, நிலக்கடலை, பருத்தி, சுடுகு, மஞ்சள், தென்னைமரம் உள்ளிட்ட 15 தாவரங்கள் பற்றிய தெளிவான விவரங்களைத் தொகுத்துப் "பணம் தரும் பயிர்கள்" என்னும் இந்த நூல் விளக்குகிறது. தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு தகவல்களை இந்நூல் விளக்குகிறது.
பணம் தரும் பயிர்கள் என்னும் இந்நூலை ஆசிரியர் ஏற்காடு இளங்கோ அவர்கள் அருமையாகத் தொகுத்துள்ளார். பல்வேறு அறிவியல் நுட்பங்களுடன் அனைவர்க்கும் பயன்படும் வகையில் இந்த நூலை உருவாக்கியுள்ளார். குடிசைத் தொழிலாகவும், பண்ணைத் தொழிலாகவும் மேற்கொள்வதற்கான சிறந்த வழிகளை விளக்கும் பயன்மிக்க நூலாக உள்ளது.
