உதடுகள் சுடும் - காகிதப் புலிகள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)
₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :ஆர்.கே. பப்ளிஷிங்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :186
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789390771509
Add to Cart(2002 வெளிவந்த ராணிமுத்து எனும் மாத இதழல் வந்த நாவல்)
டெல்லி விமான நிலையம். விடியற்காலை நேரம். விமானநிலையத்தின் எலக்ட்ரானிக் கடிகாரம் 5.15 என்று சிவப்பாய் நேரத்தைக் காட்டிக் கொண்டிருக்க - சொற்பமாய் சில பேர் சென்னையிலிருந்து வரப்போகும் விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்தார்கள். இரண்டொருவரின் கைகளில் ரோஜா மாலைகள், பதிவியிழக்க ஒரு அரசியல் கட்சித் தலைவரை வரவேற்க கட்சிக் கொடிகளோடும் - பேனர்களோடும் ஏழெட்டுப் பேர் நின்றிருந்தார்கள், டெல்லி பனியில் தொலைதூரக் கட்டிடங்கள் பாலிதீன் பேப்பரால் சுற்றப்பட்ட மாதிரி தெரிந்தது. ரன்வேயின் இரண்டு பாதைகளிலும் நடவு செய்யப்பட்டிருந்த சிவப்பு விளக்குகள் - கறுப்புத் துணியில் கோர்த்த பவளங்களாய் ஒளிர்ந்தது.
நகுலன் கையிலிருந்த கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே விமான நிலையத்திற்குள் நுழைந்தான். இருபத்தேழு வயது. கரும்பச்சையில் சபாரி அணிந்து - கழுத்துக்கு உயர்தர மப்ளர் துணியைச் சுற்றியிருந்தான். கண்களில் மெலிதான குளிர் கண்ணாடி தொற்றியிருந்தது.