அப்பால் ஒரு நிலம்
₹399+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குணா கவியழகன்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :304
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788119576234
Add to Cartஒருபுறம் ஞாபகங்களை எழுப்பித் துக்கிக்க வைக்கிறது மனம். மறுபுறம் தனக்குள் எழுந்த பொறுப்பில் நம்பிக்கை துளிர்த்து முன்தள்ளுகிறது இன்னொரு மனம். சிவகுமரனுடனான ஊர்வீட்டின் ஞாபகங்கள் மட்டும் என்றுமில்லாதவாறு இந்த நாட்களில் அவளைத் துன்புறுத்தின. இரவுகளில் குளிரை மீறிய வெம்மையை அவள் உடலில் உணர்ந்துகொண்டே இருந்தாள். அவள் தூங்காது உழன்றாள். ஒருபொழுது துக்கம் தின்றது தூக்கத்தை. இன்னொரு பொழுது தாய்மை தின்றது தூக்கத்தை. மற்றொரு பொழுது தனிமை தின்றது தூக்கத்தை.