book

விடமேறிய கனவு

₹399+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குணா கவியழகன்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :296
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788119576500
Add to Cart

நடந்த இறுதிப் போரில் சிறைபிடிக்கப்பட்ட போராளிகள் அனுபவித்த சித்திரவதைக் கொடுமைகளின் பின்னணியில் ‘விடமேறிய கனவு’ என்ற நாவலை எழுதியிருக்கிறார் குணா கவியழகன்.குணா கவியழகனின் இரண்டாவது நாவல் இது. முதல் நாவலான ‘நஞ்சுண்ட காடு’, விடுதலைக்காகக் கூடுதல் விலை கொடுப்பதே தோல்விதான் என்று முன்னறிவித்தது. இரண்டாவது நாவலான ‘விடமேறிய கனவு’, போரின் முடிவு சர்வ நிச்சயமாகப் போராளிகளுக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்ட பிறகும் ஏன் அவர்கள் தொடர்ந்து களத்தில் நின்றார்கள் என்ற கேள்வியை எழுப்பி, பதிலைத் தேடுகிறது. இந்தப் பதில் அரசியல்ரீதியானதல்ல. மாறாக, தனிமனிதனின் ஆழ்மனதில் குமிழியிடும் நுண்ணுணர்ச்சிகளின் ஆதாரத்தைப் பற்றிய விசாரணை. அதுவே இந்நாவலைப் போர் இலக்கியம் என்பதையும் தாண்டித் தனித்துவம் கொண்ட நாவலாக வெற்றிபெறச் செய்திருக்கிறது.

ஒரே எடுப்பில் படித்து முடித்துவிடுகிற வகையில் மிகச் சரளமான நடை. எனினும் பக்கங் களைப் புரட்டிப் போக நாம் கல்நெஞ்சினராக இருந்தால் மட்டுமே முடியும். நாவல் முழுவதும் தனக்குத்தானே கீறி மருந்திட்டுக்கொள்ளும் துயருற்ற நெஞ்சத்தின் சுய எள்ளலின் கரிப்புச்சுவை இழையோடி நிற்கிறது.