
மகரக்கட்டு சிறுகதைகள்
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :207
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789392474361
Add to Cartவானம் பூராவும் பிராண்டிக் கிடப்பதுபோல செவ்வரிக் கோரையிடையே மலட்டு மேகம் மருந்து தடவுவது போல நகர்வதைப் பார்க்க செல்லம் பிள்ளைக்கு மனசு வெதும்பியது. எல்லோரும் குரு பத்தினியாக மதிக்கும் இளம் மனைவி பூமயிலுவுடன் விரதமிருந்து செல்லம்பிள்ளை விராட பருவம் கதையைச் சொல்ல துரோபதை அம்மன் கோயில் தபசு மரத்தடியில் உட்கார்ந்து விட்டால், எப்பேர்ப்பட்ட மலட்டு வானமும் கம்ம ஆரம்பித்துவிடும். பஞ்சு பாண்டவர்களும் பாஞ்சாலியும் விராட நாட்டில் ஏவலாட்கள் வேஷத்தில் அவலப்பட்டுக் கிடந்த பாரத சோகத்தை அவர் உடைந்த குரலில் கல்லும் கசியச் சொல்ல வானம் கிழிபட்டு போகும் மழை கொட்டித் தீர்த்து விடும்.
