பா. வெங்கடேசன் கவிதைகள் (1988 - 2018)
₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. வெங்கடேசன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788119034147
Add to Cartஎதிர்கவிதை, பகடிக் கவிதை, மிகையியல்புக் கவிதை போன்ற இன்றைய கவிதை வெளிப்பாடுகளின் மாதிரிகளைக் கொண்டிருக்கும் பா. வெங்கடேசனின் இந்த நூல் கவிதையியல் சார்ந்த பிரக்ஞையுடன் தனித்துவமான சொல்லல் முறையும் இணைந்து உருவான கவிதைகளின் தொகுப்பாக உள்ளது. அது மட்டுமல்லாமல், சாதாரணங்களைச் சாதாரணங்களாகவே பதிவு செய்வது, அசாதாரணங்களைக் கற்பனை செய்வது, சாதாரணங்களை அசாதாரணமாக உணர்வது என்று சாத்தியப்பட்ட வழிகளிலெல்லாம் கவிதையைக் காணும் வேட்கையோடும் அந்தக் கணங்களைத் தப்பவிடாமல் பிடித்துவைத்துக்கொள்ளும் தவிப்போடும் மொழியின்மேல் ஆளுமையோடும் பொறுப்புணர்வோடும் கவிஞர் மேற்கொண்ட முப்பது வருடப் படைப்பாக்கப் பயணத்தின் ஆவணமாயும் பிரதி வெளியில் தன்னைப் பதிவுசெய்துகொள்கிறது.