
ராஜாம்பாள் (துப்பறியும் நாவல்)
₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே.ஆர். ரங்கராஜு
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2023
Add to Cartஉத்தம நாயகிகள், அவர்களின் கற்பை சூறையாட நினைக்கும் அயோக்கியர்கள், அபோக்கியர்களுக்கு உதவும் பிற பெண்கள், அப்பாவி நாயகர்கள், லட்சாதிபதி ஜமீந்தார்கள், சோரம் போகும் பெண்கள், பெண்ணுக்கு அலையும் கிழவர்கள், தாசிகள், நுப்பறியும் கோவிந்தன் என்று சில டெம்ப்ளேட் பாத்திரங்களை வைத்து சுலபமாக ஊகிக்கக்கூடிய திடுக்கிடும் திருப்பங்களோடு கதை புனைவார். பல நாவல்களில் துப்பறியும் கோவிந்தன் என்ற துப்பறியும் நிபுணர் வருகிறார். இந்த நாவல்களின் பலம் சரளமான நடை ஒன்றே. புத்தகங்கள் போரடிக்காமல் காப்பாற்றுவது அந்த நடைதான். ஆனால் curiosity value-க்காகத்தான் படிக்க வேண்டி இருக்கிறது. இவரது நாவல்களின் முக்கியத்துவம் அன்று படிப்பை வளர்ப்பதில் உதவி செய்திருக்கும் என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. க.நா.சு. ரங்கராஜுவின் தாக்கம் பற்றி இலக்கிய சாதனையாளர்கள் புத்தகத்தில் எழுதியது. (ஆயிரத்து தொளாயிரத்து) இருபதுகளில் ஒரு தமிழ் வாசகர்கள் பரம்பரையை உருவாக்க முயன்றவர்கள் இருவரென்று ஜே. ஆர். ரங்கராஜு என்பவரையும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்பவரையும் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தைக் கல்கி தெரிந்து செய்தாரென்றும், இவர்களிருவரும் தங்களையறியாமலேயே காரணமாக இருந்தார்கள் என்றும் சொல்லலாம். ஜே.ஆர்.ஆரின் ஐந்தாறு நாவல்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்றாக 1916 முதல் 1923 வரை வெளி வந்தன.பிரஸ் சொந்தக்காரரான ரங்கராஜு மொத்தம் பத்தாயிரம் பிரதிகளை அச்சிட்டு ஒவ்வொரு ஐநூறு பிரதிகளையும் ஒரு பதிப்பாகக் குறிப்பிட்டு பத்து பதிப்புகள் வரை தன் நாவல்களை வெளியிட்டார், ராஜாம்பாள், ராஜேந்திரன், சந்திரகாந்தா, ஆனந்தகிருஷ்ணன் என்று ஒவ்வொரு நாவலும் வெளியாகும்போது வாசகர்கள் மிகவும் பரபரப்பாக வாங்கிப் படித்தனர்.
