தமிழர் பண்பாட்டுப் பதிவுகள்
₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குடவாயில் பாலசுப்ரமணியன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :280
பதிப்பு :1
Published on :2022
Out of StockAdd to Alert List
தமிழர் பண்பாட்டுச் சுவடுகளை ஆவணப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள
கட்டுரைகள் அடங்கிய நூல் இது. கி.பி. 5}ஆம் நூற்றாண்டில் வஜ்ரநந்தி என்ற
சமணத்துறவி, சமயத் தலைவர்கள் கூடும் இடத்தை "சங்கம்' என்ற சொல்லால்
குறித்ததை அடிப்படையாகக் கொண்டே புலவர்கள் பலர் கூடும் இடம் "சங்கம்' என
அழைக்கப்படலாயிற்று என்று கூறும் "தமிழும் சங்கப் பலகையும்' கட்டுரையில்
தொடங்கி, "நெல் விடு தூது' நூலில் இடம்பெற்றுள்ள 45 வகையான நெற்களில்
ஒன்றான "குறுங்கை நம்பி சம்பா' என்பது திருக்குறுங்குடியில் கோயில்
கொண்டுள்ள இறைவனின் பெயரால் அப்பெயர் பெற்றது என்பதை விளக்கும் "நெல்மணி',
தாராசுரம் கோயிலில், திருப்பதிகம் பாடிய 108 ஓதுவார்களின் உருவத்தையும்
சிற்பமாக வடித்து வைத்திருப்பதைக் கூறும் "தமிழ் பாடிய நூற்றெண்மர்',
உலகில் வேறு எங்கும் இல்லாத "பஞ்சமுக வாத்தியம்' எனும் ஐந்து முகமுடைய
குடமுழவத்தை வடிவமைத்து தாளமரபுப்படி இசைத்த பெருமைக்குரியவன் தமிழன்தான்
என்பதை விளக்கும் "தமிழகம் தந்த குடமுழவம்' உள்ளிட்ட முப்பது கட்டுரைகள்
இந்நூலில் இடம் பெற்றுள்ளன.