book

ஆன்மிக தரிசனம்

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குடவாயில் பாலசுப்ரமணியன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2023
Add to Cart

மனித குலத்தில் மூன்று வகையான பிறப்புகள் இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது

1. புண்ணிய பிறவி
2. பாவப்பிறவி
3.ஞானியர் பிறவி

அவரவர் இயல்பில் அவரவர் வாழ்கிறார்கள்.

ஒரு பாவி பாவம் செய்வதன் மூலம் நல்வாழ்வும், புண்ணியவான் புண்ணியம் செய்வதன் மூலம் நல்வாழ்வும் வாழ்கிறான்.
இதில் செயலின் விளைவு என்று பார்க்கும்போது பாவப் பிறவியாளர்கள் செய்கிற பாவத்தால் இப்பிறவியில் நலம் கிடைத்தாலும் மறுபிறவியில்
உழைப்பவர்களாகவும் ஆன்மஅறிவு, பொதுஅறிவு இல்லாத அல்லது அறிவார்ந்த செயலை ஏற்று அங்கீகரிக்க முடியாத ஏழ்மைப் பிறப்பாக பிறந்து எந்த விடய ஞானமும் இல்லாமல் சேவகம் செய்து வயிறு வளர்த்தே சாவார்கள். சிலர் அங்கக் குறைபாட்டோடு பிச்சை எடுத்துச் சாவார்கள். இப்படி எந்த மகிழ்வும் இல்லாமல் பிறந்து சாகிற அனைவரும் சென்ற பிறவியில் பாவத்தால் சுகித்து வாழ்ந்தவர்கள்.

புண்ணியவான் பிறப்பு மரணத்திற்குப் பிறகு ஞானப்பிறவியாக அமையும்.
எனவே, ஒரு பாவப்பிறவி என்றால் அவன் செய்கிற பாவத்தின் விளைவைப் பெரும்பாலும் மறுபிறவியில்தான் அனுபவிப்பான். புண்ணியவான் செய்கிற பாவத்தின் விளைவை இப்பிறவியிலேயே அனுபவிப்பான். அதுபோல பாவப்பிறவியாளன் செய்த தர்மம் அடுத்த பிறவிக்கே வந்து உதவும்.