இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய்
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ஜி. பாலன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :124
பதிப்பு :1
Add to Cartதிரு. மொரார்ஜி தேசாய் 1896 பிப்ரவரி 29 அன்று குஜராத் மாநிலத்தின் பல்சார் மாவட்டத்தில் உள்ள பதேலி கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தை பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த கண்டிப்பான மனிதர். குழந்தை பருவத்திலிருந்து மொரார்ஜி தன்னுடைய தந்தையாரிடமிருந்து அனைத்து சூழ்நிலைகளிலும் நேர்மையாக இருப்பதையும் கடின உழைப்பையும் கற்றுக் கொண்டார். புனித பசார் மேல்நிலை பள்ளியில் அவர் மெட்ரிக் கல்வியை முடித்தார். 1918ல் மும்பை மாகாணத்தில் வில்சன் சிவில் சேவையில் தனது பட்டப்படிப்பை முடித்து, 12 ஆண்டு காலம் துணை ஆட்சியராகப் பணிப்புரிந்தார்.
1930ல், மகாத்மா காந்தி சுதந்திர போராட்டத்தை அறிவித்தபோது, திரு. தேசாய் ஆங்கிலேயர்களின் நீதி மீது நம்பிக்கை இழந்த அவர் தனது வேலையை இராஜினாமா செய்து, சுதந்திர போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். எந்தவொரு உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் தவறு செய்தால் ஒரு சாமானிய மனிதர் அதை சுட்டிக்காட்டும் வகையில் இந்தியாவின் மக்கள் அச்சமின்றி இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் திரு. தேசாய் உறுதியாக இருந்தார். பிரதமராக இருப்பினும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மீண்டும் சுட்டிக் காட்டினார்.
அவரைப் பொறுத்தவரை உண்மை என்பது சூழ்நிலைக்கு அப்பாற்பட்டு எப்பொழுதும் நிலையாக இருக்க வேண்டும். அவசர காலங்களில் கூட கொள்கைகளை மாற்றியமைக்க அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. கடினமான சூழ்நிலைகளிலும் அவர் தனது கொள்கைகளைக் கடைபிடித்தார். “வாழ்க்கையில் ஒருவர் உண்மையாகவும் நம்பிக்கையாகவும் செயல்பட வேண்டும்” என்ற கொள்கையை அவர் கடைபிடித்தார்.