
முயற்சி உடையார் வளர்ச்சி அடைவார்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கே.ஜி. இராஜேந்திர பாபு
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
முயற்சி உடையார் வளர்ச்சி அடைவார் – இந்நூலின் தலைப்பிலான கட்டுரை, முதல் கட்டுரையாக உள்ளது. தினமணி நாளிதழில் பிரசுரமான கட்டுரை “தோல்வி என்பது தேவையான முயற்சியைச் செய்யாதது தான், தோற்றவுடன் வாழ்க்கையே தொலைத்து விட்டதாக சோகப்பட வேண்டாம்”. இந்த வைர வரிகளை இன்றைய இளைய தலைமுறையினர் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். தோல்விக்கு துவளாத நெஞ்சம் வேண்டும்.
‘சுறுசுறுப்பைச் சுழல் விடுவோம்’ என்ற கட்டுரையில் சோம்பலை விடுத்து சுறுசுறுப்பை பெற்றால் வாழ்வில் முன்னேறலாம், சாதிக்கலாம் என்பதை நன்கு வலியுறுத்தி உள்ளார். நூலாசிரியர் கவிஞர் என்பதால் சொற்கள் முழுவதும் கவித்துவமாக வந்து விழுந்து உள்ளன.
“எடுத்த செயலில் வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வை ஏற்றுக் கொண்டால் மலைப்பாம்பின் சக்தி மனத்துக்கு வந்து விடும். மலையளவு காரியத்தையும் செய்து முடிக்கும் மாபெரும் ஆற்றல் மனிதனுக்கு வந்து விடும்”.
