book

கம்பனின் அறம் பன்முகப்பார்வை

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் அ.அ. ஞானசுந்தரத்தரசு
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

கம்பன் கவிதை இனியது; படிக்குந் தோறும் புதியது. அறிவியல் மேதை ஐன்ஸ்டின் ஒருமுறை, "எனக்கு ஒவ்வொரு எண்ணையும் பார்க்கும் போது, புதிது புதிதாகத் தோன்றுகிறது. எண்கள் என் மனத்திற்குள்ளே விந்தை புரிகின்றன” என்றார். கணிதத்தைப் போன்றது தான் கம்பனின் கவிதையும்.கணிதம் போடும் மாணவனைக் கேட்டால் தெரியும். ஒவ்வொரு கணக்கையும் அணுகி, அதற்குரிய வழியைக் கண்டறிந்து அந்தக் கணக்கைப் போட்டு முடிக்கும்போது அளப்பரிய மகிழ்ச்சி மனத்துக்குள்ளே தோன்றும். இவ்வாறு ஒரு பிரச்சினையை அணுகி அதற்கான தீர்வைக் கண்டுபிடிக்கும் திறனை (Problem Solving Skill)கணிதப்பாடம் மேம்படுத்துகிறது.