நமக்கான நம் வீடு
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜீ. முருகன்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788194179290
Add to Cartராஜஸ்தானில் இருக்கும் ஒரு அரிய வகை மார்பிள் அந்தப் பகுதியின் வெப்பம் வாய்ந்த சுற்றுச்சூழலுக்குத்தான் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கும். அதைக் கொண்டுவந்து கோத்தகிரியில் இருக்கும் ஒரு வீட்டில் பதிக்கும்போது தானும் குழம்பி அந்தக் கட்டிடத்தையும் அது குழப்பிவிடும். அந்தத் தரையில் படுத்து உறங்கினால் ஜன்னி வந்து இழுத்துக் கொள்ளும். இந்தக் கட்டிடங்கள் நம்முடைய மண்ணின் நிறத்திலும் மணத்திலும் இயற்கைக்கு அருகில் நம்மைக் கொண்டு செல்கிறன. தவிர உள்ளூர் ஆட்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அவர்களும் பெருநகரங்களுக்கு இடம் பெயர்ந்து இருநூறு அடிகள் உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை.
உனக்கு ஏன் வீண் வேலை என்று நமக்கு நெருக்கமானவர்களே சொல்லுவார்கள். சிலர் நம்மை ஒரு லேசான பைத்தியக்காரனைப் போல் பார்ப்பார்கள். அந்தப் பார்வையை ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இது அத்தனையையும் எழுத்தாளர் ஜீ.முருகன் கடந்து வந்திருப்பார் என்று தெரிகிறது. இந்த நூலின் வாயிலாக ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டிய செய்தியாக நான் அதைத்தான் பார்க்கிறேன்.
- ஷான் கருப்பசாமி