
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் பாகம் - 1
₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். குருமூர்த்தி
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :367
பதிப்பு :3
Out of StockAdd to Alert List
தனி ஒரு
மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்.' என்று முழங்கிப் பெற்ற
சுதந்திரம் ஒருபுறம் இருக்க, நந்தவனத்தில் ஒரு ஆண்டி.. .. கூத்தாடி போட்டு
உடைத்தாண்டி' என்ற நிதர்சனமான உண்மை நிலை மறுபுறம் கண்கூடாகத் தெரிகிறது.
இந்தச் சூழ்நிலையில் அனைவரது மனங்களிலும் இனம் புரியாத கவலைகளும்,
கிலேசங்களும் கேள்விக் குறியாக நிற்கின்றன. விளைவுகளை எண்ணிப் பார்க்கக்
கூடிய தைரியமும், புத்திக் கூர்மையும் வேகமாக மறைந்து கொண்டே வருகின்றன.
உண்மை, நேர்மை, நாணயம் இவற்றிற்கு எல்லாம் உதாரணப் புருஷராக விளங்கும்
குருமூர்த்தி, இவற்றிற்கும் இந்த நாட்டிற்கும் உள்ள தொடர்பை இந்த நூலில்
விளக்கிக் கூறியுள்ளார். இந்தக் கட்டுரைகள் எல்லாம் விமர்சனத்திற்கு
உள்ளாக்கப்படலாமே தவிர, வீண் வாதம் என்று விடக் கூடியவை அல்ல. இந்த நூலைப்
படித்து, தெளிவு பெற்று. 'பாரத மாதாவுக்கு ஜே' என்று உரக்கச் சொல்லுங்கள்!
எழுத்தாளர் பற்றி : சுவாமிநாதன்
குருமூர்த்தி அல்லது சு. குருமூர்த்தி என்பவர் பத்திரிகையாளர் மற்றும்
பட்டயக் கணக்காளரும் ஆவார். இவர் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தேசிய
இணை அமைப்பாளர் ஆவார். இவர் இந்தியன் எக்சுபிரசு பத்திரிகைக் குழுமத்தின்
நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் ஆலோசகராகவும் இருந்தார். சோ ராமசாமி
மறைவுக்குப் பிறகு இவர் துக்ளக் இதழின் ஆசிரியராக செயல்பட்டு வருகிறார்.
