book

நான் வடசென்னைக்காரன்

₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாக்கியம் சங்கர்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :190
பதிப்பு :3
Published on :2019
Add to Cart

கடவுள் அதிகமும் குரூரமானவர்தான். நல்லவர்கள் எல்லோரையும் சீக்கிரமே சாகடித்து விடுகிறார். அதே கடவுள் கொஞ்சம் கருணையாளனும் கூட.. அப்படிச் சுவடேதுமின்றி செத்துப் போகிறவர்களைப்பற்றி பாக்கியம் சங்கர் போன்றவர்களை எழுதவைத்தும் விடுகிறார்.யதார்த்தத்தின் குரூர வல்லமையால் வீழ்த்தப்பட்ட மனிதர்கள் இந்தப் புத்தகமெங்கும் இறைந்து கிடக்கிறார்கள். அவர்களின் நினைவுகள் குருதியின் வீச்சத்துடன் ஞாபக நரம்புகளில் பாய்ந்தோடுகின்றன.பாழ் நிலத்தின் நாடோடிப் பாடலாக இருக்கிறது இந்த வாழ்வு. அதை பாடிக்கொண்டே போகிறார் பாக்கியம் சங்கர் பிசிறு தட்டிய குரலுடன். வட சென்னையின் அசலான வாழ்வைப் பேசும் இந்தப் புத்தகம் நிச்சயம் தமிழுக்கு ஒரு நல்வரவு.