இது சிக்ஸர்களின் காலம்
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராம் முரளி
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :165
பதிப்பு :1
Published on :2019
Add to Cartஅன்றைய தினத்தில் தோனியை அங்கு கூடியிருந்த மக்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. நீண்ட முடி கற்றையுடன் களத்தில் இறங்கி, தடுமாறிய தோனியை அவர்கள் அத்தனை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. முதல் பந்திலேயே ரன் எதுவும் சேர்க்காமல், தனது விக்கெட்டை பறிகொடுத்திருந்த தோனி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். ஜார்கண்டில் அவரை எதிர்பார்த்து காத்திருந்த ஒட்டுமொத்த நண்பர்களும் அதிருப்தி அடைந்தனர். தோனியை தொலைக்காட்சியின் முன் அமர்ந்தபடியே திட்டிக்கொண்டிருந்தனர். மக்கள் கூட்டம் அடுத்து களமிறங்கப்போகும் அஜித் அகார்கரை எதிர்ப்பார்த்து காத்திருந்தது. பரிதாபகரமான முறையில் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்துவிட்டு, தங்களை கடந்து பெவிலியன் நோக்கி திரும்பும் தோனியை அவர்கள் பொருட்படுத்தவில்லை. மஹியின் மகிமையை அப்போது அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.